FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பலவீனமான பலம்; தடுப்பாட்டத்தில் கவனம் தேவை: பிஎஸ்ஜி பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக்

பிஎஸ்ஜி கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் அளித்த பேட்டி குறித்து...

25 வினாடிகள் முன்பு
லூயிஸ் என்ட்ரிக் - படம்: ஏபி
பகிர்:

பிஎஸ்ஜி (பாரீஸ் செயின்ட் ஜெர்மன்) கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக், “தடுப்பாட்டத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்” என பேட்டி அளித்துள்ளார்.

தொடர்ச்சியாக இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் வென்ற பிஎஸ்ஜி அணி கடைசி இரு போட்டிகளிலும் வெற்றி பெறாமல் தனது ஃபார்மை சற்று இழந்து வருகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை (Trophée des Champions) இறுதிப் போட்டியில் லென்ஸ் அணியிடம் 1-0 என பிஎஸ்ஜி தோல்வியுற்றது. இதனைத் தொடர்ந்து லீக் 1 முதல் போட்டியில் ரென்னீஸ் அணியிடம் 2-2 என சமன்படுத்தியது. இந்த இரண்டு போட்டிகளிலும் ஒரே மாதிரியாக கோல்களை விட்ட பிஎஸ்ஜி அணியின் தவறுகள் வெளிப்படையாகத் தெரிந்தன.

Advertisement

Advertisement

இந்த லீக் 1 போட்டியில் ஃபெர்ரன் டோரஸ் 2 கோல்கள் அடித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். இந்தப் போட்டிக்குப் பிறகு அணியின் பயிற்சியாளர் லூயிஸ் என்ட்ரிக் கூறியிருப்பதாவது:

கடந்த மூன்று சீசன்களாக இடம் மாறிமாறி விளையாடுவதுதான் நமது பலமாக இருந்து வருகிறது. இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது இடத்தை யாராவது நிரப்புகிறார்களா எனக் கண்காணிக்க வேண்டும். நீங்கள் சற்று கவனம் சிதறினாலும் பிரச்னை வரும்.

இதெல்லாம் ஒரு வீரரின் உடல் தகுதியினைப் பொறுத்து அமைகிறதென நினைக்கிறேன். கவுன்டர் அட்டாக் மட்டுமே பிரச்னை இல்லை. எதிரணியின் ஃபார்வேடு வீரர்களின் வேகம் மற்றும் தரம் ஆச்சரியம் அளித்தது. பயங்கரமான அவர்களைக் கட்டுப்படுத்துவது கடினமாக அமைந்தது என்றார்.

summary

PSG coach says players must defend rapid attacks better after two games without a win

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments