FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவில்லை: விவிஎஸ் லக்‌ஷ்மன்

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 8:07 pm IST
பிசிசிஐ அதிகாரிகளுடன் விவிஎஸ் லக்‌ஷ்மன் - படம் | பிசிசிஐ
பகிர்:

தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் கடந்த 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, பயிற்சியாளர் பொறுப்பில் தொடரவில்லை. அவருக்குப் பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடர்களை வென்று அசத்தியது. இருப்பினும், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அளவுக்கு இந்திய அணியால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

Advertisement

Advertisement

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுமா என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த சூழலில்தான் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தான் பொறுப்பேற்றுக் கொண்டிருக்க வேண்டியது எனவும், தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் விவிஎஸ் லக்‌ஷ்மன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பிசிசிஐ-ன் உடற்தகுதி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவராக என்னுடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு காரணம் இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக என்னால் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது தொடர்பாக இரண்டு முறை ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ-டம் பேசினேன். அவர்கள் என்னுடைய சூழ்நிலையை புரிந்துகொண்டு என்னுடைய திட்டங்களை செயல்படுத்த அனுமதித்தனர்

என்னுடைய பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக உருவெடுக்க நினைக்கவில்லை. பிசிசிஐ-க்காக அர்ப்பணிப்புடன் என்னுடைய வேலையை செய்தேன். பிசிசிஐன் உடற்தகுதி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தை கட்டமைப்பதில் கவனம் செலுத்தினேன் என்றார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு பிசிசிஐ உடற்தகுதி மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு அந்த பொறுப்பில் விவிஎஸ் லக்‌ஷ்மன் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

Former Indian team player VVS Laxman has stated that he did not accept the role of head coach of the Indian team due to personal reasons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments