இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமனம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டில் இடம்பெற்றுள்ள கிரிக்கெட் போட்டி வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டுக்கான இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
இந்திய அணியின் முழுநேர தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளதால், அவர் ஆசிய விளையாட்டுக்கு பயிற்சியாளராக செயல்பட முடியவில்லை. இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான ஒருநாள் தொடர் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆசிய விளையாட்டில் ஆடவர் அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மகளிர் அணிக்கு அமோல் மஜும்தார் தலைமைப் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை விவிஎஸ் லக்ஷ்மன் தலைமைப் பயிற்சியாளராக வழிநடத்தினார். அதில், இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியது.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய அணி விவரம்
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷிவம் துபே, திலக் வர்மா, நிதீஷ் குமார் ரெட்டி, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், வைபவ் சூர்யவன்ஷி.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய மகளிரணி விவரம்
ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, பிரதீகா ராவல், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், குணாலன் கமலினி, பார்தி ஃபுல்மாலி, ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்குர், கிராந்தி கௌட், அருந்ததீ ரெட்டி, ஷ்ரேயங்கா பாட்டீல், ராதா யாதவ், நந்தனி ஷர்மா.
VVS Laxman has been appointed as the head coach of the Indian team for the Asian Games.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.