FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஆசிய விளையாட்டு: ஆப்கன் டி20 அணியில் ரஷீத்கானுக்கு இடமில்லை... நபியின் மகனுக்கு வாய்ப்பு!

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் டி20 அணியில் ரஷீத் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:20 pm IST
ரஷீத்கான் - ஹசன் எசகில்.
பகிர்:

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் டி20 அணியில் ரஷீத் கான் உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளனர்.

20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயாவில், செப். 19 முதல் அக். 4 வரை நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் தர்விஷ் ரசூலி ஒரு இளம் அணியை வழிநடத்துகிறார். ஆப்கானிஸ்தானின் பிரதான அணியிலிருந்து ரஷீத் கான், முகமது நபி, ரஹ்மானுல்லா குர்பாஸ் போன்ற வழக்கமான நட்சத்திர வீரர்களுக்கு இடமில்லை.

Advertisement

Advertisement

இந்தத் தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் காலிறுதிச் சுற்றுக்கு நேரடித் தகுதி பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் அதலான் அணி, போட்டியை நடத்தும் ஜப்பான் மற்றும் நேபாளத்துடன் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்.

ஆப்கானிஸ்தான் அணியில் கரீம் ஜனத், நங்யால் கரோட்டி மற்றும் முகமது நபியின் மகனான ஹசன் எசகில் உள்ளிட்டவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்... தர்விஷ் ரசூலி, முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), முகமது அக்ரம், ஹசன் எசகில், காலித் தனிவால், இம்ரான் மிர், ஃபைசல் கான், நஜிபுல்லா ஜத்ரான், ஃபர்மானுல்லா ஷஃபி, இஸ்மத் அலாம், கரீம் ஜனத், நங்யால் கரோட்டி, அராப் குல், ஃபரிதூன் தாவூத்ஸாய், அப்துல்லா அஹமத்ஸாய்.

summary

Afghanistan will look to the next generation of talent to make an impression at the 2026 Asian Games, with Darwish Rasooli named captain of a 15-member squad for the cricket competition in Aichi-Nagoya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments