மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக லிஸா கெய்ட்லே செயல்பட்டு வந்தார். அந்தப் பொறுப்பிலிருந்து அவர் விலகியதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து லிஸா கெய்ட்லே விலகியதையடுத்து, அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக லூக் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு பயிற்சியளித்த அனுபவம் வாய்ந்தவர் லூக் வில்லியம்ஸ். அவர் கடந்த ஆண்டு முதல் இங்கிலாந்து மகளிர் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற நான்கு சீசன்களில் இரண்டு சீசன்களில் ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கடந்த 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் நிறைவு செய்ததுடன், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாததும் குறிப்பிடத்தக்கது.
A new head coach has been appointed for the Mumbai Indians team in the Women's Premier League cricket tournament.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.