3-வது ஒருநாள்: ஆப்கானிஸ்தானுக்கு 207 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 206 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அயர்லாந்து - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பெல்ஃபாஸ்ட்டில் இன்று (ஆகஸ்ட் 10) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
Advertisement
Advertisement
அந்த அணியில் கேவின் ஹோ அதிகபட்சமாக 67 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேட் கார்மைக்கேல் 32 ரன்கள், ஜெய் மூந்த்ரா 31 ரன்கள் மற்றும் கேப்டன் பால் ஸ்டிரிலிங் 23 ரன்கள் எடுத்தனர். பெஞ்சமின் காலிட்ஸ் 20 ரன்கள் எடுத்தார்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் மற்றும் காஸன்ஃபர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். யாமின் அகமதுஸாய் இரண்டு விக்கெட்டுகளையும், ஃபஸல்ஹக் ஃபரூக்கி மற்றும் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.
Batting first in the third ODI against Afghanistan, the Ireland team was bowled out for 206 runs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.