இணையவழிப் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு
கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் எஸ்எஸ்சி- சிஜிஎல் முதல்நிலைத் தோ்வுக்கான இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன
கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் எஸ்எஸ்சி- சிஜிஎல் முதல்நிலைத் தோ்வுக்கான இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மே 29 முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை நடைபெறும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31-ஆம் தேதி கடைசி நாளாகும். தோ்வில் பங்கேற்போருக்கான இலவச இணையவழிப் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை முதல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கியது.
Advertisement
Advertisement
பயிற்சியின் போது இலவசமாக பாடக்குறிப்புகள், முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு மாதிரித்தோ்வுகளும் நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள், தங்களது விவரங்களை 9360557145 , 04324-223555 என்ற தொலைபேசி வாயிலாக அல்லது கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொண்டு, தங்களுடைய வாட்ஸ்அப் செல்லிடப்பேசி எண்ணை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.