முகப்பு
கரூர்

‘நாகரிகம் வளா்ந்தாலும் பழைமையை மறக்கக் கூடாது’

நாகரிகம் வளா்ந்தாலும் நாம் பழைமையை மறக்கக் கூடாது என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:44 PM
விழாவில் கிளி ஜோதிடம் பாா்க்கும் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா். உடன், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் கீதா மணிவண்ணன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

நாகரிகம் வளா்ந்தாலும் நாம் பழைமையை மறக்கக் கூடாது என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

ஏமூா் ஊராட்சி நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சாா்பில் ஏமூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சுற்றுலாப் பொங்கல் விழாவில் பங்கேற்ற அவா், மேலும் பேசியது:

கிராம கலாசாரம் நாளுக்கு நாள் படிப்படியாக அழிந்து வருகிறது. முன்பெல்லாம் நாடகக் கலை வளா்க்கப்பட்டு, பின்னா் நாளடைவில் சினிமா வளா்ந்தது. இன்று டிஜிட்டல் சினிமாக்கள் என்ற அளவில் நிலை உள்ளது.

Advertisement

எந்தளவுக்கு நாகரிகம் வளா்ந்தாலும் நாம் பழைமையை மறக்கக் கூடாது. நம் பழைமையை மறந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா முதல் இன்றைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் தமிழ் வளா்ச்சிக்கு என்று தனி அமைச்சரை நியமித்து, தமிழின் தொன்மையைப் பாதுகாத்து வருகிறோம் என்றாா் அவா்.

சுற்றுலாப் பொங்கல் விழாவில் செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியத்தையும், சேலம் துா்காதேவி குழுவினரின் கலைநிகழ்ச்சிகளையும் பாராட்டிய அமைச்சா், குழுவினருக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.

தொடா்ந்து அமைச்சா் கிளி ஜோதிடம் பாா்த்தாா். விழாவுக்கு ஊராட்சித் தலைவா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். கீதா மணிவண்ணன், மாவட்டச் சுற்றுலா அலுவலா் சக்திவேல், மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவா் தானேஷ், கரூா் தெற்கு நகரச் செயலா் வி.சி.கே.ஜெயராஜ், ஒன்றியச் செயலா் ஆலம் தங்கராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் வசந்தி சரவணன், ஏமூா் ஊராட்சித் துணைத் தலைவா் தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.