நீதிக் கதைகள்! கரடி சொன்ன ரகசியம்!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
சுந்தரும் சிவாவும் நண்பர்கள். ஒருநாள் இருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டே நடந்தனர். பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் இருவரும் கிராமத்தின் ஓரத்தில் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் வந்துவிட்டனர். நெடிது உயர்ந்த மரங்களும் பறவைகளின் ஒலிகளும் ரம்மியமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. இருவரும் காட்டின் அழகை ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது காட்டில் இருந்த ஒரு கரடி அவர்களை நோக்கி வந்தது. அதை சுந்தரும், சிவாவும் பார்த்துவிட்டனர்!....
சிவா சுந்தரிடம், "டேய்!..... கரடி வருதுடா!..... வா ஓடிப்போய் அந்த மரத்திலே ஏறிக்கலாம்!...." என்றான். ஆனால் சுந்தருக்கு மரம் ஏறத் தெரியாது!
Advertisement
Advertisement
"எனக்கு மரம் ஏறத் தெரியாதே!..... இப்போ என்ன செய்யறது?" என்று கேட்டான் சுந்தர்.
"சரி,..... நீ எப்படியோ போ!.... எனக்கு நல்லா மரம் ஏறத் தெரியும்!... நான் இந்த மரத்துமேலே ஏறிக்கிறேன்..." என்று கூறிவிட்டு சிவா அருகில் இருந்த ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான்!
சுந்தருக்கு பயமாகிவிட்டது!.... என்ன செய்வதென்று தெரியவில்லை.... அப்போது அவன் தாத்தா அவனுக்கு சொன்ன ஒரு விஷயம் ஞாபகம் வந்தது.
கரடிகள் நம்மைத் துரத்தி வரும்போது சட்டென்று கீழே படுத்துக்கொண்டு இறந்தவனைப் போல நடிக்க வேண்டும்.... கரடி நம்மை நெருங்கி முகர்ந்து பார்த்து விட்டுச் சென்று விடும்.... என்று சுந்தரிடம் தாத்தா ஒருமுறை கூறியிருந்தார்.
ஆனது ஆகட்டும் என்று நினைத்தபடி சுந்தர் மூச்சை இறுக்கப் பிடித்துக்கொண்டு இறந்தவனைப் போல கீழே படுத்துக்கொண்டான். கரடி அவனிடம் நெருங்கி வந்தது.
அவனை காது, மூக்கு, உடல் எல்லாவற்றையும் நுகர்ந்து பார்த்தது. பிறகு அங்கிருந்து நகர்ந்து விட்டது. கரடி சென்று விட்டதை உறுதிப் படுத்திக்கொண்ட சுந்தர் மெல்ல எழுந்திருந்தான். தப்பித்ததை எண்ணிப் பெருமூச்சு விட்டான். மண் படிந்து உடைகளையும் உதறிக்கொண்டான்.
கரடி சென்று விட்டதை அறிந்து சிவாவும் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்தான். சுந்தரிடம் கிண்டலாக, "என்னடா சுந்தர்!.... "கரடி உன்காதிலே ஏதோ ரகசியம் சொன்னது போலிருக்கே!.... என்ன ரகசியம்டா அது?" என்று கேட்டான்.
"அதுவா?.... அது ஒண்ணுமில்லேடா.... உன்னை மாதிரி ஆபத்துக் காலத்திலே உதவாத நண்பனின் சகவா சத்தை வெச்சுக்காதேன்னு எனக்கு புத்திமதி சொல்லிச் சுடா!" என்றான் சிவா.
இதைக் கேட்ட சிவா வெட்கித் தலை குனிந்தான்.
A moral story that children should know.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.