முகப்பு
குழந்தைகள் உலகம்

சிரி... சிரி...

நீ சாப்பிட வைக்கும் தட்டுதான்... அதிலே தான் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாது!

Updated On : 5 ஜூலை 2026, 4:07 am IST
பகிர்:

'என் சமையலில் உங்களுக்கு எது பிடிக்கும்?'

'நீ சாப்பிட வைக்கும் தட்டுதான்... அதிலே தான் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாது!'

-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.

Advertisement

Advertisement



'ஏன்டா... டென்ஷனா இருக்கே?'

'பெட்ரோல் விலை ஏறிப்போச்சேன்னு சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சா... எம் பொண்டாட்டி அதுலேயும் பின்னாடி வந்து உக்காந்துக்கறா!'

-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

'அந்த ஓட்டல்ல சண்டை நடந்தப்ப நீ கல்லால அவன் மண்டையை உடைச்சியா?'

'ஓட்டல்ல இருந்த இட்லியை எடுத்து அடிச்சேன், ஏட்டய்யா!'

-த.நேரு, வெண்கரும்பூர்.



'இவர் காலத்துக்கு ஏத்த பிசினஸ் பண்றாரா... அப்படி என்ன செய்யறார்?'

'இப்ப எல்லோரும் ஓ.டி.டியில படம் பார்க்க ஆரம்பிச்சிட்டதால வீடு வீடா போய் பாப்கார்ன் விக்கிறார்!'

-ஷம்மா முபீன், சென்னை.



'உங்க வீட்டுக்குப் பக்கத்துலதானே மார்க்கெட் இருக்கு... நீங்களே போய் காய்கறி வாங்கலாமே, மேடம்?'

'மார்க்கெட் போன நடிகைன்னு பேப்பர்ல போட்டுடுவாங்களே!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.



'உங்க அப்பா, அம்மா நம்பகூட இருக்கிற மாதிரி, எங்க அப்பா, அம்மாவையும் நம்பகூடவே வச்சுக்

கிட்டா என்னம்மா?'

'மாமியார் - மருமக சண்டையோடு, சம்பந்திங்க சண்டையையும் சேர்த்து உங்களால தீர்த்து வைக்க முடியுமா?'



'பயங்கர முன்கோபியா இருந்த எனக்கு இப்பல்லாம் கோபமே வர்றதில்லைடா!'

'நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயத்தைச் சொல்லவே இல்லையே..?'

-வி.ரேவதி, தஞ்சை.

'காசு இல்லாம சாப்பிட்டதுக்கு என்ன வேலை செய்யறே?'

'உங்க ஏ.டி.எம். கார்டைக் கொடுங்க... பணம் எடுத்துட்டு வர்றேன்.'



'பிரிஸ்கிரிப்ஷன்ல ஏன் மஞ்சள் தடவியிருக்கு?'

'டாக்டர் உங்களுக்கு கால்கட்டு போடச்சொல்லி எழுதியிருக்காரு!'

-தீபிகா சாரதி, சென்னை.

'வீடியோ காலில் வந்தால் உன்னை நேரில் பார்க்கிற மாதிரியே இருக்கு.'

'ஆஃப் பண்ணிட்டுப் பார்... நான் நேரில்தான் வந்து நிற்கிறேன்.'



'ஒன் டூ த்ரீ... ஏன் ஓடாம நிற்கிறே..?'

'கப் சிறுசுன்னு இப்ப தான் தெரிந்தது. அதான், வாபஸ் வாங்கிட்டேன்.'



'ஒரு வாரம் வெளியூர் போறேன்...'

'திரும்பி வரச்சே வாய் நிறைய வெளியூர் வம்போடு வந்து சேர்!'



'அந்த நாளில் இட்லி ஓரணா... அது இப்ப கிடைக்கல.'

'எது கிடைக்கல... இட்லியா?'

'ஓரணா!'



'வர வர கல்யாணம் இப்படி மாறக் கூடாது.'

'ஏன்... என்ன ஆச்சு?'

'அளவு சாப்பாடு தானாம்!'



'கோழி கூவுது ... முழிச்சிக்கோ..!'

'அது நம்மை எழுப்பல. இன்னோர் கோழியை எழுப்புது. பேசாம தூங்கு!'



'மாட்டோடு கூடவே சோளக்காட்டு பொம்மையையும் ஏன் கொண்டு போறாங்க?'

'வைக்கல் கன்னுக் குட்டி போல அது வைக்கல் மாட்டுக்காரர்!'

- பர்வதவர்த்தினி, பம்மல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments