அதிமுகவில் நடப்பது குறித்து அதன் தலைவர்கள் வாய் திறக்க மறுப்பது ஏன்? - திருமாவளவன்
அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து அதன் தலைவர்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியது பற்றி...
அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது குறித்து அதன் தலைவர்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? என்று விசிக கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசியலில் ஆளுங்கட்சியான தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இதுகுறித்து திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
Advertisement
Advertisement
என்ன காரணத்துக்காக அதிமுகவிலிருந்து விஜயபாஸ்கர் வெளியேறினார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அதிமுகவிலிருந்து ஆள்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடைபெறுகிறது என்ற விவாதம் ஒருபுறம் இருக்கிறது என்றாலும் கூட, அதிமுகவில் என்ன நடக்கிறது என்பது பற்றி அதன் தலைவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கின்றனர்.
தவெகவுக்கு எதிராக ஆவேசப்படவேண்டிய, கொந்தளிக்க வேண்டிய தலைவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன? ஆளுநரிடம் சென்று மனு கொடுப்பதை ஒரு கடமையாக செய்கிறார்களே தவிர இதை ஒரு மக்கள் கருத்தாக மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. எங்கள் கட்சியை சீர்குலைக்க பார்க்கிறார்கள், இதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்ற குரலும் அதிமுக தலைவர்களிடத்தில் எழவில்லை.
தவெக, திமுக போன்றவை குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்றால் அது அவர்களின் தலைமையிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. இதனால் அதிமுக பாதிப்படைகிறது என்றால் இது அதன் தலைமையிடத்தில் கேட்க வேண்டிய கேள்வி. அதைத் தவிர்த்து, இடையில் உள்ள எங்களிடம் கேள்வி கேட்பதில் எந்தப் பயனும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
Thirumavalavan questioned on Sunday (July 5) why AIADMK leaders are refusing to speak about what is happening within the party.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.