பாஜகவுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது! ஆர். நிர்மல்குமார்
தமிழ்நாட்டில் மின்வெட்டு உள்ளதாக பாஜக முன்வைத்த விமர்சனத்திற்கு அமைச்சர் நிர்மல்குமார் அளித்த பதில் குறித்து...
பாஜகவுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாது என மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல் குமார் இன்று (மே 27) தெரிவித்தார்.
சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
''பாஜகவுக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அவர்களுக்கு தமிழகத்தைப் பற்றி பேச தகுதியே இல்லை. தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியைப் பற்றி, அவர்கள் கூறும் விமர்சனத்தைப் பற்றி பேச வேண்டிய அவசியமில்லை. இருப்பைக் காட்டிக்கொள்ள ஒரு சில கட்சிகள் பேசும்.
Advertisement
Advertisement
குறிப்பிட்ட இடத்தில் மின்வெட்டு இருக்கிறது என்றால் அதனை பரிசீலனை செய்வோம். அதை சரி செய்யும் பணிகளை மின்சார ஊழியர்கள் துரிதமாக செய்து வருகின்றனர். உயர்மட்ட அளவில் பழுதுகள் மதிப்பீடு செய்யப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.
மின்சாரத் துறையில் உயர்நிலை அதிகாரிகள் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். பழுதுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சரி செய்யப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி உடனான முதல்வர் ஜோசப் விஜய்யின் சந்திப்பு முழுக்க முழுக்க அரசு நிர்வாகம் தொடர்பானது. தனிப்பட்ட முறையிலானது அல்ல'' எனக் குறிப்பிட்டார்.