இன்றைய செய்திகள்! நேரலை
இன்றைய முக்கிய செய்திகளை உடனுக்குடன் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள.. இணைந்திருங்கள் தினமணி.காம் உடன்!
முதல்வர் விஜய் தில்லி பயணம்?
தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் சி. ஜோசப் விஜய் 3 நாள்கள் பயணமாக நாளை(மே 23) தில்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலங்களவை இடைத்தேர்தல்
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு
சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் வெள்ளிக்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Advertisement
Advertisement
வன்னி அரசு, ஷாஜகான் பதவியேற்பு
விசிக எம்எல்ஏ வன்னி அரசு மற்றும் ஐயூஎம்எல் எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
வன்னி அரசுக்கு சமூக நீதித் துறையும், ஷாஜகானுக்கு சிறுபான்மையினர் நலத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் ஆலோசகர்கள்
முதல்வர் ஜோசப் சி. விஜய்யின் ஆலோகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4.5 மணிநேர ஆலோசனை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் போர்ச்சூழல், எரிபொருள் தட்டுப்பாடு உள்பட பல்வேறு முக்கிய பிரச்னைகளும், விரைவான சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
முதல் பெண் காவலா் மறைவு
தமிழக காவல்துறை வரலாற்றில் தடம் பதித்த முதல் பெண் காவலரான சிசிலி (82), உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை (மே 21) காலமானாா்.