FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவுக்கு பெயர் பாஜக! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பேச்சு

தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவுக்கு பெயர் பாஜக என்று மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பேசியிருப்பது பற்றி..

25 செப்டம்பர் 2026, 4:23 pm IST
பகிர்:

தமிழ்நாட்டில் தவெக அரசும் கடன்தானே வாங்குகிறது என்று குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகளுக்கு சொல்வது என்னவென்றால், தவெக அரசு கடன் வாங்குகிறது, ஆனால் வளர்ச்சிக்காகத்தானே தவிர, கொள்ளையடிக்க இல்லை, நல்லது செய்வதற்காக என்று முதல்வர் ஜோசப் விஜய் கூறியுள்ளார்.

மேலும், திமுகவும் பாஜகவும் வேறு வேறு இல்லை, தில்லியில் இருக்கும் பாஜகவுக்கு பெயர் திமுக, தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவுக்கு பெயர் பாஜக என்று கூறினார்.

மதுராந்தகம் இடைத்தோ்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேலை ஆதரித்து, தொழுப்பேடு, ஆத்தூா் அருகேயுள்ள திறந்தவெளி அரங்கில் முதல்வா் ச.ஜோசப் விஜய் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

என்னுடைய தங்கை மரகதம் குமரவேலுக்கு வாக்களியுங்கள். நம்ம வீட்டுப் பெண்களை தவறாக பேசியவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். 108 தொகுதிகளில் வென்ற தவெக ஆட்சியமைக்கக் கூடாதா? திமுகவும் மற்றும் பலரும் சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சித்தார்களே? அந்த மற்றும் பலர் திமுகவின் கிளை கழகமாகவே மாறிவிட்டார்கள்.

ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து சாமானியன் ஆட்சிக்கு வரக் கூடாதாம். தமிழ்நாட்டில் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் வழியில் ஆட்சி வந்துவிட்டால் ஊழல் செய்ய முடியாது என்றுதான் மாறி மாறி ஆட்சியமைக்க திட்டமிட்டனர்.

ராஜிநாமா செய்த எம்எல்ஏக்கள் அனைவரும் இதைத்தானே சொல்கிறார்கள்.

நான் முதல்வராக பல இடங்களுக்கு ஆய்வுக்குச் செல்கிறேன். ஒரு பாலத்துக்கு சென்றேன், உடனே நாங்கள் கட்டிய பாலத்தில் ஏறி, விஜய் என்ன ஷூட்டிங் எடுக்கிறார் என்று கேட்கிறார்கள்.

நான் கேட்கிறேன், நீங்கள் கொடுத்த பணத்தில் கட்டிய பாலமா? உங்களிடம் ரூ.10 ஆயிரம்தானே இருக்கு, கார் கூட இல்லையே, ஓ.. கணக்கில் வராத பணத்தை வைத்துக் கட்டினீர்களா? இதை நாங்கள் கேட்கவில்லை. மக்கள் கேட்கிறார்கள்.

முதல்வர் என்றால் முதலாளி இல்லை, மக்களின் வேலைக்காரர்கள். ஆனால் நீங்கள் பேசுவதைப் பார்த்தால் முதல்வர் என்றால் முதலாளி போல இருக்கிறது. இப்போது குறுக்கு வழியில் கணக்குப் போட்டு ஆட்சியை பிடிக்கலாம் என்று. ஆனால், இந்த கணக்கு சரியாக வராது. எங்களுக்கும் மக்களுக்கும் இருப்பது அன்புக் கணக்கு.

திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க நினைத்த மற்றும் பலருக்கும் சொல்கிறேன். தமிழக மக்கள் அனைவரும் என் சொந்தங்கள் என்று தமிழக முதல்வர் விஜய் கூறினார்.

தவெகவும் கடன்தான் வாங்குகிறது என்கிறார்கள். ஆனால் கொள்ளையடிப்பதற்காக அல்ல. வளர்ச்சிப் பணிக்காகத்தான் கடன் வாங்குகிறோம்.

வாக்குறுதி கொடுத்ததில் பாதியைத்தான் கொடுக்கிறார்கள் என்கிறார்கள். இலவச சிலிண்டர் ஆறு தானே கொடுக்கிறேன் என்று சொன்னார், ஆனால் 3 தான் கொடுக்கிறார் என மக்களை கேள்வி கேட்கச் சொல்கிறார்கள். ஆனால் மக்களோ நம்ம வீட்டு புள்ளை விஜய் கொடுக்கும், நம்ம வீட்டு புள்ளை விஜி கொடுக்கும் என்று கரியைப் பூசி அனுப்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து விசில் அடித்தபோது திமுகவும் மற்றும் பலரும் அலறிவிட்டார்கள்.

பால் கொள்முதல் விலையை ஐந்து ஆண்டுகளில் உயர்த்துகிறோம் என்று சொன்னோம், ஆனால் மூன்று மாதத்தில் நிறைவேற்றியிருக்கிறோம். எதற்காக நம்ம விவசாயிகளுக்காக.

தீய சக்தியான திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று மற்றும் பலர் முயன்றதால் ஏற்பட்ட மன வேதனையை தாங்க முடியாமல் எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்தனர்.

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தவர்கள் மனதில் எவ்வளவு வலி இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதே வலிதானே எம்ஜிஆர் தொண்டர்களுக்கும் இருக்கும். எம்ஜிஆர் தொண்டர்களே கவலைப்படாதீர்கள். உங்களுக்கு நான் இருக்கிறேன்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு திமுகவுதான் எதிரி. நம்ம தவெகவுக்கும் திமுகதான் எதிரி. தொகுதி மறுவரையறை வந்துவிட்டால் திமுக ஆதரவு அளித்து மத்திய அரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ளு துடித்துக் கொண்டிருக்கிறது என்று விஜய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments