FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாட்டில் 11 கொலைகள்: எத்தனை உயிர்கள் பறிபோனாலும் வாய் திறக்காத முதல்வர் - கனிமொழி

தமிழ்நாட்டில் எத்தனை உயிர்கள் பறிபோனாலும் முதல்வர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை என கனிமொழி தெரிவித்திருப்பது குறித்து...

கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் எத்தனை உயிர்கள் பறிபோனாலும் முதல்வர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை என மக்களவை உறுப்பினரும் திமுக தலைவருமான கனிமொழி திங்கள்கிழமை (நவ. 9) தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன.

Advertisement

Advertisement

ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதல்வர் விஜய் வாய் திறக்கப் போவதில்லை.

முதல்வரே, மக்கள் எல்லாவற்றையும் எப்போதும் சகித்துக்கொண்டே இருப்பார்கள் என்று நினைத்துவிடாதீர்கள் என்று கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

summary

Lok Sabha member and DMK leader Kanimozhi stated on Monday (Nov. 9) that Chief Minister Vijay will not open his mouth, no matter how many lives are lost in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.