FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

டெங்குவால் குழந்தைகள் பலியாவதை தவெக அரசு தடுக்க வேண்டும்: கனிமொழி

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமல்படுத்திய முதல்வர் விஜய்க்கு கனிமொழி கோரிக்கை வைத்துள்ளது குறித்து...

54 வினாடிகள் முன்பு
பிரசாரத்தில் கனிமொழி - எக்ஸ்
பகிர்:

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமல்படுத்தும் முதல்வர் விஜய், டெங்குவால் குழந்தைகள் பலியாவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி இன்று (செப். 28) கேட்டுக்கொண்டார்.

தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது:

Advertisement

Advertisement

''வீட்டில் உள்ள குட்டி குழந்தைகளிடமும் வாக்கு சேகரித்தார் முதல்வர் விஜய். மாமாவுக்கு வாக்களிக்குமாறு அடம்பிடியுங்கள் என்று கேட்டார்.

மதுரையில் 16 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கழிவுநீர் குட்டையில் இருக்கிறார். கொலைக்கு நியாயம் கிடைக்க அவன் பெற்றோர் போராடுகிறார்கள். ஆனால், அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

நேற்று தாராபுரம் தொகுதியில் போராடியவர்களை கைது செய்துள்ளனர். மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்துக்குச் செல்லும்போது, மாற்றுத் திறனாளி குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாகிறது. செல்லும் வழியில் குற்றச்சம்பவம் நடந்துவிட்டது என்று தெரியக்கூடாது என்பதற்காக, மாற்றம் எனக் கூறிக்கொண்டு உருவான அரசு, தேர்வுக்காக பயந்து சிறுமி பொய் கூறியதாக மாற்றிவிட்டனர்.

எந்த குழந்தைகளிடம் கெஞ்சி வாக்குகள் பெற்றனரோ, அந்த குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லை.

டெங்குவால் ஒரு வயது குழந்தை, இரண்டு வயது குழந்தை இறக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மருந்துக்கு தட்டுப்பாடு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நகைக்கடைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

யாரையும் எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காக பெண்களுக்கு பல சலுகைகளை அறிவித்தது திமுக. நமது வேட்பாளர் சுகன்யா, தாய்மாமனுக்கு சீர் கொடுக்கும் அளவுக்கு படித்து உயர்ந்துள்ளார். தாய்மாமன் சீர் என்ற பெயரில் 50 ஆண்டுகளுக்கு பெண்களை பின்னோக்கி இழுக்கிறார் விஜய்.

பாஜகவுக்கு திமுக பயந்துகொண்டிருப்பதாக முதல்வர் விஜய் கூறுகிறார். எதிர்க்கட்சியிலே இருந்தபோது எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தது திமுக.

நாடாளுமன்றத்தில் மோடி, அமித் ஷா என யாராக இருந்தாலும் அவர்களை எதிர்த்து மக்களுக்காக குரல் கொடுப்பது திமுக'' என கனிமொழி பேசினார்.

summary

Child deaths due to dengue must be prevented Kanimozhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments