
ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்
ரீல் விடுவதும் ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது குறித்து...

எடப்பாடி பழனிசாமி - எக்ஸ்
ரீல் விடுவதும் ரீல்ஸ் போடுவதும் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலதனம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 28) விமர்சித்தார்.
தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
''ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெக மூலதனம்: இபிஎஸ் விமர்சனம். மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முயற்சிக்க வேண்டும்.
சட்டப்பேரவையில் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் பதில் அளிப்பார் என்று எதிர்பார்த்தால் சினிமா வசனங்களை மட்டுமே பேசிவிட்டுச் சென்றார்.
கோட் சூட் போட்டு அழகாக ஆய்வுக் கூட்டம் நடத்துவார். அதனை பத்திரிகைகளில் படம் பிடித்து காட்டுவார். ஆனால், அந்த ஆய்வுக் கூட்டம் குறித்து எதையுமே பேசமாட்டார்.
மக்களை நம்ப வைக்கும் ஆட்சி தேவையா? காலை அலுவலகத்துக்கு வருவதைப்போன்று வருகிறார். மாலை 5 மணிக்கு வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுவிடுகிறார். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் பார்க்க முடியாது. இப்படி ஒரு முதல்வர் இந்தியாவிலேயே இல்லை.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வருவதற்கான முதல்வர் விஜய் வருவதற்கான செலவு ரூ. 4.5 கோடி. எளிமையாகச் சென்று தண்ணீர் திறந்துவிட முடியாதா?
மக்கள் பிரச்னைகளுக்காக 7 முறை சிறை சென்றுள்ளேன். முதல்வர் விஜய் மக்களின் எத்தனை பிரச்னைகளில் களத்தில் நின்றார்?
தவெக ஆட்சியில் மின் தடை அடிக்கடி ஏற்படுகிறது. ஆளும் கட்சி அமைச்சர்கள் செய்தியாளர்களுடன் பேசும்போதே மின்வெட்டு ஏற்படுகிறது. தமிழகத்தில் மின்பற்றாக்குறை உள்ளதாக கூறுகிறார் மின்சாரத் துறை அமைச்சர்.
மின்வெட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியாத அரசாங்கம் எதற்கு? அதிமுக ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம் உரிமைத்தொகை, முதியோர் உதவித் தொகை உயர்த்தப்பட்டதா? போலி வாக்குறுதிகள் எதற்கு?
தமிழகத்தின் நிதி நிலைமை சரியில்லை என அவர்களே வெள்ளை அறிக்கை வெளியிடுகின்றனர். இந்த நிலையில் புதிய தலைமைச் செயலகம் எதற்கு? என எடப்பாடி பழனிசாமி'' கேள்வி எழுப்பினார்.
Summary
Spinning yarns and posting Reels are TVK's stock-in-trade: EPS criticizes.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





