முகப்பு

பெண்கள் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய தவெக அரசு; கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்ய தாமதம் - கனிமொழி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்யாமல் தவெக அரசு காலம் கடத்துவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளது குறித்து...

பெண்கள் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய தவெக அரசு; கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்ய தாமதம் - கனிமொழி
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை கைது செய்யாமல் தவெக அரசு காலம் கடத்துவதாக திமுக எம்.பி. கனிமொழி புதன்கிழமை (நவ. 25) குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இது தொடர்பாக ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து திமுக தலைவர் கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க ஜெட் வேகத்தில் செயல்படும் தவெக அரசு, தவெகவினர் என்றால் ஆமை வேகத்தில் நகர்கிறது!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி, நாதகவைச் சேர்ந்த பெண் ஒருவரை இரவு உடையிலேயே கைது செய்தது வரை, ‘ஜென் ஸி’-ல் செயல்பட்ட இளைஞர்கள் எனத் தன்னைக் கேள்வி கேட்ட பலரையும் இரவு, அதிகாலை என்று பாராமல் அராஜகமாகக் கைது செய்தது இந்த அரசு.

தற்போது, தனது கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், இன்னும் அவரைக் கைது செய்யாமல் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறது பெண்களின் பாதுகாவலர் என்று வாக்கு வாங்கிய தவெக அரசு.

summary

DMK MP Kanimozhi alleged on Wednesday (Nov. 25) that the government is delaying the arrest of the Kallakurichi MLA.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.