தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழி
அதிகாரிகளின் அனுமதியின்றி சோத்துப்பாறை அணையை தவெகவினர் திறந்த விவகாரத்தில் கனிமொழி கருத்து...
தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
Advertisement
Advertisement
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்குத் தெரியாமலேயே தவெக நிர்வாகிகள் திறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிமுறைகளையும் மதிக்க தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல!
தவெக ஆட்சியில் வாழ்வது ஒரு மோசமான திகில் திரைப்படத்தில் வாழ்வதைப் போல இருக்கிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ, யார் என்ன செய்வார்களோ என்ற பதற்றத்திலேயே மக்கள் இருக்க வேண்டியிருக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக 1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாள்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது.
இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெகவினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு அதனை விடியோவாகவும் பதிவிட்டுள்ளனர்.
அதிகாரிகளின் அனுமதியின்றி அணையைத் திறந்த தவெகவினரின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.