சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

சோத்துப்பாறை அணை திறப்பு: தவெகவினர் மீது புகார்

சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து...

சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட தவெகவினர். - படம்: எக்ஸ்

Updated On :

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த, தவெகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணை பெரியகுளம், தென்கரை, எ.புதுப்பட்டி, தாமரைக்குளம் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாகவும் இருந்து வருகிறது.

கொடைக்கானல் பேரிஜம் ஏரி, அகமலைப் பகுதிகளில் பெய்யும் மழை நீா் வராகநதி வழியாக வந்து சோத்துப்பாறை அணையை வந்தடைகிறது. இந்த அணையின் மூலம் பெரியகுளம், தென்கரை, வடகரை, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்களும், இதைச் சுற்றி வசிக்கும் 2 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக அகமலைப் பகுதியில் போதிய மழை இல்லை. இதனால், அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

மொத்தம் 126.26 உயரமுள்ள அணையின் நீர்மட்டம் கடந்த அக். 1-ஆம் தேதி 59.04 அடியாக குறைந்தது. இதனால், குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், அகமலைப் பகுதியில் பெய்த மழையால், அணைக்கு நீர் வரத்து உயர்ந்து, முழு கொள்ளவை எட்டியது.

இந்த நிலையில், புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு நீர் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் இருந்த நிலையில், நேற்று காலை எந்தவொரு அரசு அதிகாரிக்கும் தெரியாமல், தவெக நிர்வாகிகள் சிலர் பெரியகுளம் சோத்துப்பாறை அணையில் இருந்து 1000 ஏக்கர் விவசாய பாசனத்திற்காக ஆயக்கட்டு புது வாய்க்காலிலிருந்து தண்ணீரைத் திறந்து விட்டுள்ளனர்.

பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சபரி ஐங்கரன் வழிகாட்டுதலின்படி, தேனி வடகிழக்கு மாவட்ட இணை செயலர் ஷேக் அலி தலைமையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாக விடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் அதனை ரீல்ஸாகவும் பதிவிட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்காமல், ஆளுங்கட்சியைச் சேர்ந்த தவெகவினர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சோத்துப்பாறை அணையை திறந்ததாக விடியோ வெளியிட்ட தவெகவினர் மீது பெரியகுளம் தென்கரை காவல்நிலையத்தில் உதவி செயற்பொறியாளர் மனோஜ் புகார் மனு அளித்துள்ளார்.

சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டு, அதனை விடியோ எடுத்து வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

A complaint has been filed against members of the TVK (Tamizhaga Vetri Kazhagam) for opening the Sothuparai Dam in Theni district without the knowledge of the authorities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.