FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் தெவெகவினர் திறந்து வைத்த நிகழ்வுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் தெவெகவினர் திறந்து வைத்த நிகழ்வுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (நவ. 18) கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக 1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாள்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை என தெரிகிறது .

இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட தாமதம் ஆகும் என்பதாலோ என்னமோ, முதன்மைக் காட்சிகளுடன் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக தவெகவினர் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள். திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “பெட்ரோமாக்ஸ்” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு, “இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.

இப்படி வித விதமாக பிரச்னைகளை இழுத்துவிடுபவர்களிடம் இருந்து மக்களைக் காப்பதா? மாவட்ட ஆட்சியரைக் காப்பதா? அணையைக் காப்பதா? என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”!

ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்.

சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த தவெக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

summary

AIADMK Edappadi Palaniswami condemned an incident on Wednesday (Nov. 18) in which members of the TVK opened the Sothupparai Dam in Theni without the knowledge of the authorities.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.