FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

தவெகவின் 6 மாத கால ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருப்பது பற்றி...

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

கடந்த 6 மாதமாக துயரமான ஆட்சியையே தவெக வழங்கியிருப்பதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 6 மாதகால ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

Advertisement

Advertisement

“தவெகவின் ஆறு மாத ஆட்சிக் காலம் நிறைவடைந்துள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவையில் பேசும்போது, தமிழ்நாட்டில் 6 மாதத்தில் சிறப்பான ஆட்சியை வழங்குவோம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். ஆனால், சிறப்பான ஆட்சியை அவர்கள் தரவில்லை. துயரமான ஆட்சியைதான் வழங்கியுள்ளனர்.

தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிற இடதுசாரிகள்கூட சட்டம்-ஒழுங்கு சரியில்லை எனத் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் கொலை நடக்காத நாள்களே இல்லை. அதுவும் தீபாவளி நாளன்று 11 கொலைகள் நடந்ததாக ஊடகத்தில் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், தற்போதுதான் தீபாவளி அன்று கொலை நடக்கிறதா? கடந்த காலங்களில் எவ்வளவு கொலைகள் நடந்தது என்று பட்டியலிட்டார். அது அழகல்ல. இதனை தடுத்து நிறுத்துவதற்குதான் மக்கள் உங்களுக்கு ஆட்சியைக் கொடுத்துள்ளார்கள்.

பொருளாதார துறையில் கடந்த காலத்தை ஒப்பிட்டு பேசலாம். ஆனால், குற்றச்சம்பவங்களில் ஒப்பிடக்கூடாது. குற்றவாளிகளுக்கு காவல்துறையைக் கண்டால் எவ்வித அச்சமும் இல்லை. ஆடு வெட்டுவது போன்று மனித உயிர்களை வெட்டிக் கொன்று குவிக்கின்றனர்.

சென்னையில் நீதிபதிகள், அமைச்சர்கள் குடியிருக்கும் கிரீன்வேஸ் சாலையில் பட்டப்பகலில் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இந்த பகுதியிலேயே மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பு அளிப்பார்கள். சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இதையெல்லாம் முதல்வர் கண்டும் காணாமலும் இருப்பது வேதனையாக இருக்கிறது.

காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லை. இனியாவது இந்த அரசு கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டில் குற்றம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

மாவட்டத்தின் தலைவராக இருக்கும் பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ. மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? இந்தச் செயலுக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டின் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

summary

A disastrous administration; the government is in a deep, Kumbhakarna-like slumber! — Edappadi Palaniswami’s criticism!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.