FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம்

தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக என திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்திருப்பது குறித்து...

10 அக்டோபர் 2026, 2:15 pm IST
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக என திமுக எம்.பி. கனிமொழி சனிக்கிழமை (அக். 10) தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, அவருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டதையடுத்து, கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜந்தர் மந்தரில் போராட முயன்ற அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் என பலர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

சிஜேபிக்கு ஆதரவு தெரிவித்தும் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும் தமிழ்நாட்டில் பெசண்ட் நகர், சேப்பாக்கம் போன்ற இடங்களில் போராடிய மாணவர் அமைப்புகளை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது.

இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது.

தில்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

DMK MP Kanimozhi stated on Saturday (Oct. 10) that the TVK is essentially the BJP in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments