வாய்கிழிய வசனம் பேசிய முதல்வருக்கு உறுத்தவில்லையா? கனிமொழி கேள்வி!
தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து குத்திக் கொலை செய்த நபர், தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, “தூத்துக்குடி மாவட்டம், வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
Advertisement
Advertisement
பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு.
வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அன்றாடச் செய்தியாகிக்கொண்டிருக்கிறது. சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது?
பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் விஜய் அவர்களே, இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.