FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டிருப்பது பற்றி...

48 வினாடிகள் முன்பு
முதல்வர் விஜய் - DIPR
பகிர்:

தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்மையில் தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளில் நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து முதல்வர் ச. ஜோசப் விஜய், ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பெறப்பட்ட கருத்துகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அண்மையில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த உயர்நிலைக் குழுவிற்கு, தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் J.K. திரிபாதி, (ஓய்வு)தலைவராகவும், கூடுதல் காவல்துறை தலைவர்/சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குநர் K. சங்கர், மற்றும் சிறைத் துறையின் முன்னாள் துணைத் தலைவர் S. ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

இந்த உயர்நிலைக் குழு, தமிழ்நாட்டில் கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும்,

தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு, சிறையின் பாதுகாப்பிற்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை ஆய்வு செய்யவும், தொழில்நுட்ப இடைவெளிகள் மற்றும் தற்போதைய பணிச்சுமைக்கேற்ப போதுமான அளவில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும், ஆய்வு

செய்து, நாட்டின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளின் பாதுகாப்பை

வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும். இக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கும்.

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும், பணியில் கவனக்குறைவாக செயல்படும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

CM Vijay has ordered the formation of a high-level committee to review security in Tamil Nadu's prisons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments