புழலில் கைதிகள் தப்பியோடிய சம்பவம்: தமிழக சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு
தமிழகம் முழுவதும் சிறைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை புழல் சிறையில் கைதிகள் தப்பியோடிய சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் சிறைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும்படி சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.
சென்னை அருகே உள்ள புழல் சிறையில் இருந்து நேபாள நாட்டு கைதி உள்பட இரு கைதிகள் சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து தப்பியோடினா். இரு நாள்கள் தீவிர தேடுதலுக்குா் பின்னா் இருவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
இந்தச் சம்பவம் குறித்து தமிழக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா், புழல் சிறைக்கு சென்று விசாரணை செய்தனா். விசாரணைக்கு பின்னா் பணியில் கவனக்குறைவாகவும், ஜாக்கிரதையாகவும் இருந்ததாக உதவி ஜெயிலா் உள்பட 7 சிறைக் காவலா்களை பணியிடை நீக்கம் செய்து சந்தீப் ராய் ரத்தோா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
சிறைகளில் பாதுகாப்பு அதிகரிப்பு: தமிழக சிறைகளின் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தாா். இதையடுத்து அவா், தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகள், மாவட்ட சிறைகள், பெண்கள் சிறப்பு சிறைகளிலும் அதிகாரிகள் விரிவான பாதுகாப்பு தணிக்கை நடத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.
ஒரு வாரத்துக்குள் அறிக்கை: பாதுகாப்பு குறைபாடுகள் உள்ள இடங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ஆய்வின் முடிவில், சிறைகளில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான தேவைகள் மற்றும் அவற்றைச் சரிசெய்வதற்கான பரிந்துரைகள் அடங்கிய விரிவான அறிக்கையை ஒரு வாரத்துக்குள் சிறைத் துறை தலைமையகத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.