ஸ்ரீநாத் - மீன்வளம், மரிய வில்சன் - நிதித்துறை! அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!!
தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக அமைச்சராகப் பதவியேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக அமைச்சராகப் பதவியேற்றவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 10 பேர் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) நடைபெற்றது.
பதவியேற்பு விழாவில், வேளச்சேரி எம்.எல்.ஏ. குமார், கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார், அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது ஃபர்வாஸ், தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார், ராதாகிருஷ்ணன் நகர் எம்.எல்.ஏ. மரிய வில்சன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு, ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. மதன் ராஜா. பி, ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி. கே, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. எம். விஜய் பாலாஜி, ராசிபுரம் எம்.எல்.ஏ. லோகேஷ் தமிழ் செல்வன், சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ், தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், அவிநாசி எம்.எல்.ஏ. எஸ். கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. சி. விஜயலட்சுமி, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. ஆர்.வி. ரஞ்சித்குமார், கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத், திருவாடானை எம்.எல்.ஏ. ராஜீவ், கடலூர் எம்.எல்.ஏ.பி. ராஜ்குமார், அரக்கோணம் எம்.எல்.ஏ. வி. காந்திராஜ் ஆகியோருக்கு ஆளுநர் ஆர்லேகர் அடுத்தடுத்து அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Advertisement
Advertisement
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவரும் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார், மேலூர் தொகுதி எம்எல்ஏ பெ. விஸ்வநாதன் ஆகியோரும் அமைச்சா்களாகப் பதவியேற்றனர்.
இந்த நிலையில், ஏற்கனெவே இருந்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டு, புதிய அமைச்சர்களுக்குத் தனித்தனியே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே அமைச்சராக பதவியேற்ற செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நிர்மல்குமாரிடம் இருந்து சட்டப்பேரவை விவகாரங்கள் துறை, செங்கோட்டையனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கான துறைகள்
மீன்வளத்துறை - ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
கால்நடைத்துறை - கமலி (அவிநாசி)
பால்வளத்துறை - விஜயலட்சுமி (குமாரபாளையம்)
வனத்துறை - ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)
சுற்றுச்சூழல்துறை - ராஜீவ் (திருவாடனை)
வீட்டுவசதித்துறை - ராஜ்குமார் (கடலூர்)
கூட்டுறவுத்துறை - காந்திராஜ் (அரக்கோணம்)
சிறு,குறு, நடுத்தர தொழில்துறை - மதன்ராஜா (ஓட்டபிடாரம்)
சமூகநலன், மகளிர் நலத்துறை - ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)
சுற்றுலாத்துறை - ராஜேஷ் குமார் (கிள்ளியூர்)
கைத்தறி, ஜவுளித்துறை - விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)
வணிகவரி, பத்திரப்பதிவுத்துறை - லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)
போக்குவரத்துத்துறை - விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)
இந்து சமய அறநிலையத்துறை - ரமேஷ் (ஸ்ரீரங்கம்)
உயர்கல்வித்துறை - பெ. விஸ்வநாதன் (மேலூர்)
செய்யறிவு, தகவல் தொழில்நுட்பத்துறை - குமார் (வேளச்சேரி)
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - சம்பத் குமார் (கோவை வடக்கு)
தொழிலாளர் நலத்துறை - முகமது பர்வேஸ் (அறந்தாங்கி)
மனிதவளத்துறை - சரத்குமார் (தாம்பரம்)
நிதித்துறை - மரியவில்சன் (ஆர்.கே.நகர்)
வெளிநாடுவாழ் தமிழர் நலன் - தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)
வேளாண் துறை - வினோத் (கும்பகோணம்)
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை - விக்னேஷ் (கிணத்துக்கடவு)
Portfolios have been allocated to those who have newly assumed office as ministers in the Tamil Nadu Cabinet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.