விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து 16 அமைச்சர்கள்!
விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து 16 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளதைப் பற்றி...
முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்யின் மக்கள் இயக்கத்திலிருந்து தமிழ்நாடு அமைச்சரவையில் 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் விஜய், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 10 பேர் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று (மே 21) நடைபெற்றது.
புதியதாகப் பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஏற்கனவே உள்ள 10 அமைச்சர்கள், இன்று பதவியேற்ற 23 பேர் என மொத்தமுள்ள 33 பேரில் 16 பேர் மக்கள் இயக்கத்திலிருந்து அதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில், தவெக பொதுச்செயலரும், தி.நகர் எம்.எல்.ஏ என். ஆனந்த், மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வெங்கட்ரமணன், காரைக்குடித் தொகுதி எம்.எல்.ஏ. பிரபு, கும்பகோணம் எம்.எல்.ஏ. வினோத், கடலூர் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அறந்தாங்கி எம்.எல்.ஏ. முகமது ஃபர்வேஸ், சேலம் தெற்கு எம்.எல்.ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. விக்னேஷ், அரக்கோணம் எம்.எல்.ஏ. காந்திராஜ், ராஜபாளையம் எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரி, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. எம். விஜய் பாலாஜி, ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. ரமேஷ், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. தென்னரசு, தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார், கோவை வடக்கு எம்.எல்.ஏ. சம்பத் குமார் ஆகியோர் விஜய்யின் மக்கள் இயக்கத்தில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பதவியேற்றுள்ளனர்.
Sixteen members from the Vijay Makkal Iyakkam have found a place in the Tamil Nadu Cabinet.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.