முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆகஸ்டு மாத இறுதிக்குள் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்:சிங்காரவேலு

தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம் நிர்யணம் செய்வது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டமைப்பு ஆசிரியர்களின் தகுதி, சம்பளம், வகுப்பறைகள், ஆய்வகம், பராமரிப்பு

Updated On : 1 மார்ச், 2013 at 7:52 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:04 PM

தமிழ்நாட்டில் உள்ள தனியார் நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தை கோவிந்த ராஜ் தலைமையிலான கமிட்டி நிர்ணயம் செய்தது. இந்த கல்வி கட்டணம் 3 வருடத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியது.இது வருகிற மே மாதத்தில் நிறை வடைகிறது.  அதனால் தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.இது குறித்து தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண நிர்ணய குழு தலைவர் சிங்கராவேலு கூறியதாவது:-

தனியார் பள்ளிகளுக்கான புதிய கல்வி கட்டணம் நிர்யணம் செய்வது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கு அறிக்கை கோரப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டமைப்பு ஆசிரியர்களின் தகுதி, சம்பளம், வகுப்பறைகள், ஆய்வகம், பராமரிப்பு செலவு, குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய விவரங்கள் ஒவ்வொரு பள்ளிகளிடமும் பெறப்பட்டு வருகிறது. அவர்களின் தகவல் அடிப்படையில் ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிய கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.ஆகஸ்டு மாத இறுதிக்குள் அனைத்து தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.