புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ.1.27 கோடி மோசடி: 3 பேர் கைது!
புதுச்சேரி தொழிலதிபரிடம் ஆன்லைன் டிரேடிங் மோசடி செய்தது பற்றி..
புதுச்சேரி தொழிலதிபரிடம் ரூ. 1.27 கோடி ஆன்லைன் டிரேடிங் மோசடி செய்த 3 பேரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ. 1.27 கோடி மோசடி செய்த வழக்கில், பல மாநிலங்களில் தேடப்பட்டு வந்த 3 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மோசடி பணம் பல்வேறு வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாமக்கல், திருப்பூர், ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (33), சதீஷ்குமார் (30), சந்தோஷ்குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 4 செல்போன்கள், 5 வங்கிக் கணக்கு புத்தகங்கள் மற்றும் 3 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இவர்கள் மீது மேற்குவங்கம், நாகாலாந்து உள்ளிட்ட பல மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட சைபர் மோசடி புகார்கள் இருப்பதும், கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Cyber crime police arrested three individuals for defrauding a Puducherry businessman of ₹1.27 crore in an online trading scam.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.