மாரிதாஸ் கைது ஏன்? சைபர் கிரைம் போலீஸார் விளக்கம்
மாரிதாஸ் கைது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.
யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.
அதில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு அவதூறு பரப்பியதால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவினர் அளித்த புகார்களைத் தொடர்ந்து யூடியூபர் மாரிதாஸ் அவரது மதுரை வீட்டில் இருந்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஏஐ புகைப்படங்கள் மூலம் பரப்புவதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தவெகவினர் புகார் கூறி வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில் இன்று மதுரை வந்த சென்னை சைபர் கிரைம் போலீஸார், யூடியூபர் மாரிதாஸை கைது செய்தனர். கைதாவதற்கு முன் இதனை மாரிதாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மதுரையில் கைது செய்யப்பட்டுள்ள மாரிதாஸை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக தவெகவை விமர்சித்ததாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனிடையே யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
The Cyber Crime police have clarified that Maridhas was arrested for spreading slander by releasing an AI-generated photo of Industries Minister Keerthana.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.