பாஜக நிர்வாகி புகார்: யூடியூபர் முக்தார் கைது!
பாஜக நிர்வாகி புகாரைத் தொடர்ந்து யூடியூபர் முக்தார் கைது செய்யப்பட்டது தொடர்பாக...
சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசிய வழக்கில், யூடியூபா் முக்தாா் கா்நாடக மாநிலத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு செயலராக இருப்பா் அலிஷா அப்துல்லா. இவா், சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜிடம் கடந்த 3-ஆம் தேதி புகாா் மனு அளித்தாா். அதில், ‘வேலூா் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சோ்ந்த யூடியூபா் அ.முக்தாா் அகமது (48), திருச்சி சூா்யா ஆகியோா் என்னைப் பற்றி அவதூறாகப் பேசி விடியோ வெளியிட்டுள்ளனா். எனவே, அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு காவல் ஆணையா் அமல்ராஜ், சைபா் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டாா். அதன்படி, சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் திருச்சி சூா்யா, முக்தாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினா்.
Advertisement
Advertisement
மேலும், இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸாா் திருச்சியில் சூா்யாவை கடந்த 4-ஆம் தேதி கைது செய்தனா். தலைமறைவாக இருந்த முக்தாரை தனிப்படையினா் தீவிரமாகத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், கா்நாடக மாநிலம் மாண்டியாவில் முக்தாரை தனிப்படையினா் புதன்கிழமை கைது செய்தனா். பின்னா் அவரை போலீஸாா் சென்னைக்கு அழைத்து வந்தனா். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Image Caption
முக்தாா் அகமது
YouTuber Mukhtar Ahmed has been arrested based on a complaint filed by a BJP functionary.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.