முகப்பு
செய்திகள்

பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தகவல்.

Updated On : 10 ஜூன் 2026, 1:44 pm IST
பாரதிராஜா - ENS
பகிர்:

தமிழ்த் திரையுலகில் இயக்குநர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா (84) இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

வயோதிகம் தொடர்பான உடல்நலக் குறைவுக்கு வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா, சென்னை நீலாங்கரை வீட்டில் இன்று காலை இயற்கை எய்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது மறைவுக்கு திரையுலகினரும் முக்கிய பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இறுதி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.

Advertisement

Advertisement

பாரதிராஜாவின் இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரான தேனியில் நாளை மாலை நடைபெறும் என்றும், இன்று இரவு, சென்னை இல்லத்திலிருந்து பாரதிராஜா உடல் தேனிக்குக் கொண்டு செல்லப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பாரதிராஜா பெற்ற விருதுகள்

கடந்த 2004 ஆம் ஆண்டு, நாட்டின் நான்காவது உயரிய விருதான ’பத்ம ஸ்ரீ’ பாரதிராஜாவுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை 6 முறையும், மாநில விருதை 6 முறையும் வென்றுள்ளார். மேலும், நூற்றுக்கணக்கான விருதுகளை வென்றவர்.

உள்ளத்தாலும் உணர்வுகளாலும் தமிழன் என்று எப்போதும் சொல்லிலும் செயலிலும் காட்டி வந்த பாரதிராஜா, இந்த மண்ணும், பண்பாடும்தான் என்னுடைய தகுதிகள், அதுதான் என்னை வளர்த்தன என்று பல மேடைகளில் உரக்கச் சொல்லியிருக்கிறார்.

summary

Reports indicate that the funeral rites for the late 'Iyakkam Imayam' Bharathiraja will take place in Theni tomorrow evening.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.