முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்னி பஸ் கட்டணம் உயருகிறது

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்வதற்கு மாதம்தோறும் டீசல் விலையை 40 காசு முதல் 50 காசு வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி

Updated On : 1 ஏப்ரல் 2013, 2:50 pm IST
பகிர்:

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரி செய்வதற்கு மாதம்தோறும் டீசல் விலையை 40 காசு முதல் 50 காசு வரை உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து எண்ணை நிறுவனங்கள் மாதம் தோறும் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இதனால் போக்குவரத்து கழகங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து ஆம்னி பஸ்களில் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அப்சல் கூறியதாவது:-

குளிர்சாதன பேருந்துகளில் 50 ரூபாய் உயர்த்தப்படும். குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளில் பயண தூரத்துக்கு ஏற்ப 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டடணம் உயர்த்தப்படும். ஏப்ரல் 15-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமுலுக்கு வரும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.