முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாப் நெடுஞ்சாலையில் காவலர் சுட்டுக் கொலை

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துணை காவல்துறை ஆய்வாளர், ஜலந்தர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

Updated On : 1 ஏப்ரல் 2013, 10:31 am IST
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துணை காவல்துறை ஆய்வாளர், ஜலந்தர் - லூதியானா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

காவல்துறை துணை ஆய்வாளர் குர்தேவ் சிங், நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக  வந்த கார் ஒன்றை சோதிப்பதற்காக காவல்துறையினர் நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாகச் சென்றது. அதனை பிடிக்க குர்தேவ் உள்ளிட்ட காவலர்கள் காரை துரத்திச் செல்லும் போது, காரில் இருந்த ஒருவன், துப்பாக்கியால் காவலர்களை நோக்கிச் சுட்டான். இதில் குர்தேவின் நெஞ்சில் குண்டடி பட்டு, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அந்த காரில் 4 அல்லது 5 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.