முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னையில் நாளை யஷ்வந்த் சின்ஹா பேசுகிறார்

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா நாளை (புதன்கிழமை) சென்னையில்

Updated On : 2 ஏப்ரல் 2013, 4:14 am IST
பகிர்:

இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா நாளை (புதன்கிழமை) சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் மத்திய அரசு தோல்வியடைந்துள்ளதை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாகவும், எடுக்க கூடிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் குறித்தும் மார்ச் 19-ம் தேதி முதல் பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

Advertisement

Advertisement

இதன் ஒரு பகுதியாக இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்னை குறித்து பாஜகவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா புதன்கிழமை மாலை 6 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள ஹேமாமாலினி திருமண மண்டபத்தில் நடக்கும் சிறப்புக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.