இலங்கையில் மனித உரிமை மீறல்: அமெரிக்கா
அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது என பல்வேறு கொடுமைகளை சந்திக்கின்றனர். இலங்கை பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் இத்தகைய மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக
இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
இலங்கையில் 2012ஆம் ஆண்டில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது
அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது, காணாமல் போவது, கொலை செய்யப்படுவது என பல்வேறு கொடுமைகளை சந்திக்கின்றனர். இலங்கை பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் இத்தகைய மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர். முக்கியமாக சமூக ஆர்வலர்கள், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகமாக உள்ளது. இவர்களை ஆட்சியாளர்கள் அச்சுறுத்துகின்றனர். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் திடீரென மாயமாகி விடுகின்றனர். மனித உரிமை மீறல் தொடர்பாக புகார்கள் அதிக அளவில் கொடுக்கப்பட்டாலும் சில அதிகாரிகள் மட்டுமே விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கியதே இல்லை. சமூக நலத் துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பானம் பகுதியில் பயமுறுத்தல், வழிப்பறி மற்றும் ஊழல் செயல்களை ஊக்குவித்து வருகிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement