முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை: உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டு உளவு துறைக்கு தெரிவித்ததாக கடந்த 1990-ம் ஆண்டு ஜோத்பூரில் முகமது சபி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை

Updated On : 21 ஏப்ரல், 2013 at 4:45 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:08 PM

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டு உளவு துறைக்கு தெரிவித்ததாக கடந்த 1990-ம் ஆண்டு ஜோத்பூரில் முகமது சபி என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை பறிமாறியது உள்பட பல்வேறு பிரிவுகளின் முகமது சபி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் முகமது மனு செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்திலும் மனு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.கே. பிரசாத், வி.கோபால கௌடா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு:

Advertisement

அரசுத் தரப்பு சாட்சியங்களை பார்க்கும் போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் முகமது சபியிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. எதற்காக இந்த ஆவணங்களை அவர் வைத்திருந்தார் என தெளிவாக விளக்கவில்லை.போலீஸார் தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து சோதனையிட்டனர் என அவர் கூறுவதை ஏற்க முடியாது. சோதனை உத்தரவை போலீஸார் பெறாவிட்டாலும், அவரது வீட்டில் தான் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வழக்கில் கீழ் நீதிமன்றம் மிகச் சரியான முறையில் தான் தீர்ப்பு அளித்துள்ளது எனக்கூறி முகமது சபியின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.