முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைக்குள் வசதியாக உள்ள சீன வீரர்கள்

இந்திய எல்லைப் பகுதியான லடக்குக்குள் ஊடுருவியுள்ள சீன வீரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.

Updated On : 2 மே, 2013 at 11:48 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

இந்திய எல்லைப் பகுதியான லடக்குக்குள் ஊடுருவியுள்ள சீன வீரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.

இந்திய எல்லையில் இருந்து 19 கி.மீ. தொலைவுக்குள் ஊருடுவி வந்து முகாமிட்டு தங்கியுள்ள சீன வீரர்களுக்கு, சீனாவில் இருந்து வரும் டிரக்குகள் மூலமாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் கிடைத்து வருகிறது.

இந்திய எல்லைக்குள் 5 கூடாரங்களை அமைத்து தங்கியுள்ள சீன வீரர்கள் அங்கிருந்து திரும்பிச் செல்வதற்கான அறிகுறிகளே இல்லாமல் உள்ளனர். இதில் சீன அரசும் பிடிவாதமாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா இடையே நடைபெற்ற 3வது கூட்டமும் தோல்வியிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.