முகப்பு
தற்போதைய செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

பாமக நிறுவனர் ராமதாஸ் அரியலூர் செல்ல வாய்ப்பிருப்பதை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.

Updated On : 11 மே 2013, 12:19 pm IST
பகிர்:

பாமக நிறுவனர் ராமதாஸ் அரியலூர் செல்ல வாய்ப்பிருப்பதை அறிந்த அம்மாவட்ட ஆட்சியர், அரியலூர் மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவினைப் பிறப்பித்தார்.

திருச்சி மத்திய சிறையில் இருந்து  ஜாமீனில் வெளியான ராமதாஸ், மரக்காணம் கலவரத்தில் உயிரிழந்த பாமக தொண்டர் செல்வராஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற அரியலூர் செல்ல திட்டமிட்டார்.

இதைத் தொடர்ந்து, அரியலூரில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்பதால், மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் மாவட்டத்தில் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

இந்த தகவல், ராமதாஸூக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர் அரியலூர் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.