மிசோரமில் நிலச்சரிவு : 8 பேர் பலி, 11 பேர் மாயம்
மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:10 PM
மிசோரம் மாநிலம் எய்சவால் பகுதியில் இன்று காலை நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானார்கள். 11 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
லைப்புட்லேன்ட் பகுதியில் இருந்த 9 வீடுகளும் நிலச்சரிவில் புதைந்து போனது. அப்பகுதியில் மீட்புப் படையினர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்பதால் பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.