முகப்பு
தற்போதைய செய்திகள்

ஐபிஎல் சூதாட்டம் : சென்னையில் கைதான 4 பேருக்கு போலீஸ் காவல்

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சென்னையில் கைது செய்யப்பட்ட 4 தரகர்களை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 21 மே 2013, 4:12 pm IST
பகிர்:

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி சென்னையில் கைது செய்யப்பட்ட 4 தரகர்களை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சூதாட்டத்தில் தரகர்களாக செயல்பட்டவர்கள் சென்னையில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து, சென்னையில் சிபிசிஐடி காவல்துறையினரால் 4 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.