முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மாடி நியமனம்

தமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மாடி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Updated On : 21 மே 2013, 5:43 pm IST
பகிர்:

தமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மாடி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபால் மின் நிதி நிறுவன தலைவராக மாற்றப்பட்டுள்ளார். தற்போது மின் நிதி நிறுவன தலைவராக இருந்த கிரிஜா வைத்யநாதன், நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை செயலாளராக இருந்த நிரஞ்சன் மாடி உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை செயலாளராக இருந்த ககன் தீப் சிங் பேடி வருவாய்த் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வருவாய்த் துறை செயலாளராக இருந்த ராஜிவ் ரஞ்சன் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத் ராஜ் துறை செயலாளராக இருந்த விஜயகுமார்  கால்நடை பராமரிப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.