இன்று முதல் சிலிண்டர்களுக்கு நேரடி மானிய முறை துவக்கம்
எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டம் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் இன்று துவக்கப்படுகிறது.
எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டம் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் இன்று துவக்கப்படுகிறது.
எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையான ரூ.435ஐ, நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால், கர்நாடகாவின் மைசூர், இமாச்சலின் மண்டி மாவட்டங்களில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, 18 மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட உள்ளது.
Advertisement
Advertisement
இனிமேல், புதுச்சேரி, வடக்கு கோவா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் உள்ள எல்பிஜி நுகர்வோர், ஒவ்வொரு முறை சிலிண்டருக்கு பதிவு செய்யும் போதும், அவர்களது வங்கிக் கணக்கில், மத்திய அரசின் மானியத் தொகையான ரூ.435 வரவு வைக்கப்படும். இதனுடன், நுகர்வோர் அளிக்க வேண்டிய ரூ.410ஐயும் சேர்த்து ரூ.845 ரூபாய் கொடுத்து வீட்டுக்கு வரும் சிலிண்டரை நுகர்வோர் வாங்க வேண்டும்.
இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.