ஒசூரில் ரூ.15 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப் திருடிய 2 ஓட்டுநர்ர்கள் கைது.
ஒசூரில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்பை திருடிச் சென்ற 2 ஓட்டுநர்களை அட்கோ போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஒசூரில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்பை திருடிச் சென்ற 2 ஓட்டுநர்களை அட்கோ போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஒசூர் அருகே உள்ள கதிரேப்பள்ளி கிராமத்தில் தனியார் இரும்பு பைப் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் இருந்து கேரள மாநிலத்திற்கு இரண்டு லாரிகளில் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப் விற்பனைக்காக கடந்த வாரம் புதன்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த இரண்டு லாரிகளும் கேரளாவிற்கு செல்லவில்லை. லாரிகளும் காணவிலலை. இது குறிóத்து லாரி உரிமையாளர் ரமேஷ் அட்கோ காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்தப் புகாரைத் தொடர்ந்து அட்கோ போலீஸார் வழக்குப் பதிந்து லாரிகளை தேடி வந்தனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் இரு லாரிகளை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டுபிடிக்கப்பட்டு அதில் இருந்த இரும்பு கம்பிகள் திருடிச் சென்றது கண்டிபிடிக்கப்படடது.
இரண்டு லாரி ஓட்டுநர்கள் பாலக்கோடு ரமேஷ்(26), பெரியாம்பட்டி பவுன்ராஜ்(28) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான இரும்பு பைப்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அட்கோ காவ்ல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.