முகப்பு
தற்போதைய செய்திகள்

தலையில் கல்லை போட்டு பெயிண்டர் கொலை

சென்னை அமைந்தகரை முத்து இருளாண்டி காலனி 2-வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தவர் கோட்டி என்ற கோடீஸ்வரன் (40). திருமணம் ஆகாத இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 3 சிறிய வீடுகள் உள்ளன. அதில் மாத வாடகையாக ரூ.10 ஆயிரம் கிடைத்து வந்தது.இவரும் அதே பகுதியில்

Updated On : 1 ஜூன், 2013 at 2:50 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM

சென்னை அமைந்தகரை முத்து இருளாண்டி காலனி 2-வது குறுக்குத் தெருவில் வசித்து வந்தவர் கோட்டி என்ற கோடீஸ்வரன் (40). திருமணம் ஆகாத இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியில் 3 சிறிய வீடுகள் உள்ளன. அதில் மாத வாடகையாக ரூ.10 ஆயிரம் கிடைத்து வந்தது.இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலையில் கோடீஸ்வரன் தனது வீட்டுக்குள் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் ஞானசேகரன், சூளைமேடு இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீஸார் அங்கு விரைந்து சென்று கோடீஸ்வரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

திருமணம் ஆகாததால் இரவு நேரத்தில் அடிக்கடி தனது வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்து கோடீஸ்வரன் உல்லாசமாக இருந்துள்ளார். நேற்று இரவும் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததை அருகில் குடியிருப்பவர்கள் தட்டி கேட்டனர். அவர்களுடன் கோடீஸ்வரன் கடுமையான தகராறில் ஈடுபட்டுள்ளார்.அடிக்கடி பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பது அருகில் குடியிருப்பவர்களுக்கு இடையூராக இருப்பதால் அதே பகுதியில் வசிக்கும் சிலம்பரசன் என்பவர் கோடீஸ்வரனை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.