கச்சத்தீவு அருகே விசைப்படகு கவிழ்ந்து விபத்து
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களின் விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராமநாதபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து கச்சத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க ஏராளமான மீனவர்கள் விசைப்படகில் சென்றனர். நேற்று இரவு முதலே கடலில் காற்றின் சீற்றம் அதிகமாகக் காணப்பட்டது. இந்த நிலையில், காற்றின் சீற்றத்தால் விசைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். அப்போது அங்கிருந்த சக மீனவர்கள், 5 பேரையும் பத்திரமாக மீட்டனர்.