முகப்பு
தற்போதைய செய்திகள்

காதலிக்க மறுத்த பெண்ணை பழிவாங்க மாணவனைக் கொன்ற இன்ஸ்பெக்டர்

உத்தரப்பிரதேசத்தில், தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் உறவுக்காரப் பையனை கூலிப்படை வைத்து கொன்ற காவல்துறை ஆய்வாளர் தலைமறைவாகிவிட்டார்.

Updated On : 11 ஜூன் 2013, 3:45 pm IST
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில், தன்னை காதலிக்க மறுத்த பெண்ணின் உறவுக்காரப் பையனை கூலிப்படை வைத்து கொன்ற காவல்துறை ஆய்வாளர் தலைமறைவாகிவிட்டார்.

லக்னோவில், 14 வயதாகும் மாஸ் என்ற சிறுவன், கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்டான். வேறு யாரையோ கொல்ல வந்தவர்கள் குறி தவறி சிறுவனை சுட்டுவிட்டதாக நினைத்த காவலர்கள், அவனை சுட்டவர்களை கைது செய்து விசாரித்ததில், காவல்துறை அதிகாரியாக இருக்கும் சஞ்சய் ராய் என்பவர், அச்சிறுவனை கொல்ல ரூ.2.5 லட்சம் வழங்கியதாகக் கூறினர்.

இதையடுத்து, சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  காவல்துறை பயிற்சிக்கு வந்த பெண் ஒருவர் மீது காவல்துறை ஆய்வாளர் ரவீந்தர் கௌர் காதல்  கொண்டார். ஆனால் ரவீந்தர் கௌரின் காதலை, அப்பெண் ஏற்கவில்லை. இதனால், அவளது குடும்பத்தையே ஒழித்துக் கட்ட திட்டமிட்ட ரவீந்தர், அப்பெண்ணின் குடும்பத்துடன் நெருங்கி பழகி குடும்பத்தில் ஒருவராகியுள்ளார். பிறகு, அச்சிறுவனைக் கொல்ல கூலிப்படையை பயன்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தலைமறைவாகிவிட்ட ரவிந்தர் சிங், காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.