முகப்பு
தற்போதைய செய்திகள்

திருட்டு செல்பேசி எண்ணுக்கு 150 முறை பேசியுள்ள விக்ரம் அகர்வால்

திருட்டுப் போன செல்பேசி எண்ணுக்கு, 150 முறை பேசியுள்ளார் தொழில் அதிபர் விக்ரம் அகர்வால்.

Updated On : 11 ஜூன் 2013, 12:19 pm IST
பகிர்:

திருட்டுப் போன செல்பேசி எண்ணுக்கு, 150 முறை பேசியுள்ளார் தொழில் அதிபர் விக்ரம் அகர்வால்.

ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி சிபிசிஐடி காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்ட ஹோட்டல் உரிமையாளர் விக்ரம் அகர்வாலிடம் காவல்துறையினர் நேற்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், அவர் ஒரே எண்ணுக்கு தொடர்பு கொண்டு 150 முறை பேசியுள்ளார். அந்த செல்பேசி எண், நெல்லை சங்கரன் கோவில் முகவரியில் வாங்கப்பட்டிருந்தது. சங்கரன்கோவில் சென்று, அந்த செல்பேசி எண்ணை வாங்கிய நபரிடம் விசாரித்ததில் செல்போன் காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

எனவே, ஒரு திருட்டுப் போன செல்பேசி எண்ணுக்கு, விக்ரம் அகர்வால் 150 முறை பேசியுள்ளது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், விக்ரம் அகர்வால், குருநாத் மெய்யப்பன், விண்டூ தாரா சிங் ஆகியோர்  திருப்பதியில் சந்தித்துப் பேசியுள்ளதும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.