முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்: ஆணையர்

கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்களை பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என ஆணையர் காதர்சுல்தான் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஜூன் 2013, 10:27 am IST
பகிர்:

கடையநல்லூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்களை பெற விரும்புபவர்கள் விண்ணப்பங்களை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என ஆணையர் காதர்சுல்தான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி:

கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் தற்பொழுது குடிநீர் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிய பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதால், புதிய பகிர்மானக் குழாய்கள் மூலம் குடிநீóர் விநியோகம் செய்திட ஏதுவாக பொதுமக்கள் தங்களின் பழைய குடிநீர் இணைப்புக்களை, புதிய பகிர்மானக்குழாய்களில் நகராட்சி மூலமாக இணைத்துக் கொள்ள கேட்டுக்  கொள்ளப் படுகிறார்கள்.

Advertisement

Advertisement

இதற்காக, பொதுமக்கள் குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகை ரூ.4000, கூடுதல் வைப்புத் தொகை ரூ.2000 மற்றும் நிலுவையிலுள்ள குடிநீர் கட்டணம் போன்றவற்றை ஜூன் 30ம் தேதிக்குள் நகராட்சி அலுவலகத்தில் செலுத்திட வேண்டும். ஜூன் 30க்கு பின்னர் புதிய பகிர்மானக்குழாய்களிலிருந்து மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

மேலும்,இத்திட்டத்தின் கீழ், புதிய குடிநீர் இணைப்புக்களும் வழங்கப்படவுள்ளதால் பொதுமக்கள் புதிய குடிநீர் இணைப்பிற்கான விண்ணப்பத்தினை நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார் ஆணையர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments